வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
அருணகிரிநாதருக்கு ஜெ.
*திருப்புகழ் முற்றோதல்*
28.07.2025
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில்
*தினம் ஒரு திருப்புகழ் - 549*
*திருப்புகழ் 549 அரிவையர் நெஞ்சுரு (சிதம்பரம்)*
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன ...... தனதான
அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
தருவிர கங்களி னாற்பெரி
தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந்
தகிலொடு சந்தன சேற்றினில்
முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப்
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
சரியம ருங்குடை போய்ச்சில
பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப்
பனிமுக முங்குறு வேர்ப்பெழ
இதழமு துண்டிர வாய்ப்பகல்
பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ
சரியையு டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு வார்க்கருள்
தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா
திரிபுவ னந்தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே
*தெரியஇ ருந்தப ராக்ரம*
*உருவளர் குன்றுடை யார்க்கொரு*
*திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே.*
*------------------------------------------------------------------*
*பாடுவதற்கு எளிதாக பதம் பிரித்தது *
*------------------------------------------------------------------*
வேல்முருகா வடிவேல் முருகா
வேல்முருகா வெற்றிவேல் முருகா
அரிவையர் நெஞ்சு உருகாப் புணர்
தரு விரகங்களினாற் பெரிது
அவசம் விளைந்து விடாய்த்து அடர் ...... முலைமேல் வீழ்ந்து
அகிலொடு சந்தன சேற்றினில்
முழுகி எழுந்து எதிர் கூப்புகை
அடியின் அகம் பிறை போற்பட ...... விளையாடிப்
பரிமளம் விஞ்சிய பூக் குழல்
சரிய மருங்குடை போய்ச் சில
பறவைகளின் குரலாய்க் கயல் ...... விழி சோரப்
பனி முகமுங் குறுவேர்ப்பு எழ
இதழ் அமுது உண்டு இரவாய்ப்பகல்
பகடி இடும்படி தூர்த்தனை ...... விடலாமோ
சரியை உடன் க்ரியை போற்றிய
பரமபதம் பெறுவார்க்கு அருள்
தருகணன் ரங்க புரோச்சி தன் ...... மருகோனே
சயிலம் எறிந்த கை வேற்கொடு
மயிலினில் வந்து எனை ஆட்கொளல்
சகம் அறியும்படி காட்டிய ...... குருநாதா
திரிபுவனந் தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில் விளங்கு சிராப்பளி ...... மலைமீதே
*தெரிய இருந்த பராக்ரம*
*உருவளர் குன்றுடை யார்க்கொரு*
*திலதம் எனும்படி தோற்றிய ...... பெருமாளே.*
*-----------------———————-----------------------------------------------*
*கருத்துரை* : திரிசிராப்பள்ளி முருகவேளே! மாதர் வசமாகி அடியேன் அலையாமல் ஆண்டருள்வீர்.
** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் 'அதல சேடனார் ஆட' என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.
*——————--------------------——-------------------------------------------*
எல்லா புகழும் முருகனுக்கே.
அருணகிரிநாதர் திருத்தாள் போற்றி போற்றி.
பொருளுக்கும் விரிவுரைக்கும்
பிழைகள் ஏதேனும் இருப்பின் எம்பெருமானும் அடியார்களும் பொறுத்தருளுக.
பிழைகள் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் புத்தகத்திலும் வெப் ப்ளாக்கிலும் திருத்தி விடுகிறோம்.
அன்புடன்
காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன்
அற்புதத் திருப்புகழ் சபை, கோவை
Email : arputhathiruppugazhsabai@gmail.com
M : 9361410269