Thursday, September 25, 2025

 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

அருணகிரிநாதருக்கு ஜெ.

*திருப்புகழ் முற்றோதல்* 31.01.2024


அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் *தினம் ஒரு திருப்புகழ் - 31*


பாடல் கேட்க / பதிவிறக்கம் செய்ய For Audio Download


https://arputhathiruppugazh.blogspot.com/2024/01/31.html


*திருப்புகழ் 31 இயலிசையில் உசித   (திருச்செந்தூர்)* 


தனதனன தனன தந்தத் ...... தனதான

     தனதனன தனன தந்தத் ...... தனதான


இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி

     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே

*உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி*

     *உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே*


மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்

     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

*கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே*

     *கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.*


*------------------------------------------------------------------*

*பாடுவதற்கு எளிதாக பதம் பிரித்தது *

*------------------------------------------------------------------*


*வேல்வேல் வேல்வேல் வேல்முருகா வேல்*

*வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்*


இயல் இசையில் உசித வஞ்சிக்கு ...... அயர்வாகி

     இரவு பகல் மனது சிந்தித்து ...... உழலாதே

*உயர் கருணை புரியும் இன்பக் ...... கடல் மூழ்கி*

     *உனை எனதுள் அறியும் அன்பைத் ...... தருவாயே*


மயில் தகர் கல் இடையர் அந்தத் ...... தினை காவல்

     வனச குற மகளை வந்தித்து ...... அணைவோனே

*கயிலைமலை அனைய செந்திற் ...... பதி வாழ்வே*

     *கரிமுகவன் இளைய கந்தப் ...... பெருமாளே.*           

  

*-----------------———————-----------------------------------------------*

*கருத்துரை* :  வள்ளி நாயகரே! செந்திற் குமாரரே! தேவரீரை அடியேனுடைய உள்ளத்தில் அறிய அன்பைத் தருவீர்.

*——————--------------------——------------------------------------------*

எல்லா புகழும் முருகனுக்கே.

அருணகிரிநாதர் திருத்தாள் போற்றி போற்றி.


பொருளுக்கும் விரிவுரைக்கும்

https://kaumaram.com/thiru/nnt0031_u.html

https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page148

https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page149


http://kuganarul.blogspot.com/2018/05/blog-post_5.html


பிழைகள் ஏதேனும் இருப்பின் எம்பெருமானும் அடியார்களும் பொறுத்தருளுக.


பிழைகள் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் புத்தகத்திலும் வெப் ப்ளாக்கிலும் திருத்தி விடுகிறோம்.


அன்புடன்

காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன்

அற்புதத் திருப்புகழ் சபை, கோவை

Email : arputhathiruppugazhsabai@gmail.com

M : 9361410269

Tuesday, September 16, 2025

*திருப்புகழ் 590 கலக்கும் கோது (திருச்செங்கோடு)*

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
அருணகிரிநாதருக்கு ஜெ.

*திருப்புகழ் முற்றோதல்* 16.09.2025

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் *தினம் ஒரு திருப்புகழ் -590*

பாடல் கேட்க / பதிவிறக்கம் செய்ய For Audio Download

https://arputhathiruppugazh.blogspot.com/2025/09/590.html

*திருப்புகழ் 590 கலக்கும் கோது (திருச்செங்கோடு)*

தனத்தந் தானன தனத்தந் தானன
    தனத்தந் தானன ...... தனதான

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
    கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
    கடைக்கண் பார்வையி ...... லழியாதே

*விலக்கும் போதக மெனக்கென் றேபெற*
    *விருப்பஞ் சாலவு ...... முடையேனான்*
*வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை*
    *விடற்கஞ் சேலென ...... அருள்வாயே*

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
    அறுக்குங் கூரிய ...... வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
    யடுக்கும் போதக ...... முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
    திருச்செங் கோபுர ...... வயலூரா
*திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய*
    *திருச்செங் கோடுறை ...... பெருமாளே.*

*------------------------------------------------------------------*
*பாடுவதற்கு எளிதாக பதம் பிரித்தது *
*------------------------------------------------------------------*

சாமியே முருகையா சாமியே சரணம் முருகையா
சாமியே முருகையா சாமியே சரணம் முருகையா

கலக்குங் கோது அற வடிக்குஞ் சீரிய
    கருப்பஞ் சாறு எனும் ...... மொழியாலே
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள்
    கடைக்கண் பார்வையி ...... லழியாதே

*விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற*
    *விருப்பஞ் சாலவும் ...... உடையேன் நான்*
*வினைக் கொண்டே மன நினைக்குந் தீமையை*
    *விடற்கு அஞ்சேல் என ...... அருள்வாயே*

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
    அறுக்குங் கூரிய ...... வடிவேலா
அழைத்து உன் சீரிய கழற் செந் தாமரை
    அடுக்கும் போதகம் ...... உடையோராம்

சிலர்க்கு அன்றே கதி பலிக்குந் தேசிக
    திருச்செங் கோபுர ...... வயலூரா
*திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய*
    *திருச் செங்கோடு உறை ...... பெருமாளே.*

*-----------------———————-----------------------------------------------*
*கருத்துரை* : திருச்செங்கோட்டு வேலா! மனமாசு அற அஞ்சேல் என்று கூறி ஆட்கொள்வீர்.

* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.

'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
*——————--------------------——-------------------------------------------*

எல்லா புகழும் முருகனுக்கே.
அருணகிரிநாதர் திருத்தாள் போற்றி போற்றி.

பொருளுக்கும் விரிவுரைக்கும்

https://kaumaram.com/thiru/nnt0590_u.html
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page919
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page920
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page921
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page922

https://kuganarul.blogspot.com/2018/06/blog-post_587.html

பிழைகள் ஏதேனும் இருப்பின் எம்பெருமானும் அடியார்களும் பொறுத்தருளுக.

பிழைகள் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் புத்தகத்திலும் வெப் ப்ளாக்கிலும் திருத்தி விடுகிறோம்.

அன்புடன்

காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன் (நினைவில்)
அற்புதத் திருப்புகழ் சபை, கோவை
Email : arputhathiruppugazhsabai@gmail.com
M : 9361410269

Friday, September 5, 2025

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
அருணகிரிநாதருக்கு ஜெ.

*திருப்புகழ் முற்றோதல்*
09.08.2025

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில்
*தினம் ஒரு திருப்புகழ் -557*

பாடல் கேட்க / பதிவிறக்கம் செய்ய For Audio Download

https://arputhathiruppugazh.blogspot.com/2025/08/557.html

*திருப்புகழ் 557 பகலிரவினில்  (சென்னிமலை)*

தனதனதனத் ...... தனதான
    தனதனதனத் ...... தனதான

பகலிரவினிற் ...... றடுமாறா
    பதிகுருவெனத் ...... தெளிபோத
*ரகசியமுரைத் ...... தநுபூதி*
    *ரதநிலைதனைத் ...... தருவாயே*

இகபரமதற் ...... கிறையோனே
    இயலிசையின்முத் ...... தமிழோனே
*சகசிரகிரிப் ...... பதிவேளே*
    *சரவணபவப் ...... பெருமாளே.*

*------------------------------------------------------------------*
*பாடுவதற்கு எளிதாக பதம் பிரித்தது *
*------------------------------------------------------------------*

வேல்முருகா வெற்றிவேல் முருகா
வேல்முருகா வடிவேல் முருகா


பகல் இரவினில் ...... தடுமாறா
    பதிகுருஎனத் ...... தெளிபோத
*ரகசியம் உரைத்து ...... அநுபூதி*
    *ரத நிலை தனைத் ...... தருவாயே*

இகபரம் அதற்கு ...... இறையோனே
    இயல்இசையின்முத் ...... தமிழோனே
*சக சிரகிரிப் ...... பதிவேளே*
    *சரவணபவப் ...... பெருமாளே.*


*-----------------———————-----------------------------------------------*
*கருத்துரை* : சிரகிரியை சென்னிமலை என்றும் கூறுவர். சென்னிமலை ஈரோட்டிற்கு அப்பால் ஈங்கூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தலம்.

*சென்னிமலை மேவும் செம்மலே! அநுபூதி ஞான இன்பத்தைத் தந்தருள்வீர்.*
*——————--------------------——-------------------------------------------*

எல்லா புகழும் முருகனுக்கே.
அருணகிரிநாதர் திருத்தாள் போற்றி போற்றி.

பொருளுக்கும் விரிவுரைக்கும்

https://kaumaram.com/thiru/nnt0557_u.html
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page829
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page830

பிழைகள் ஏதேனும் இருப்பின் எம்பெருமானும் அடியார்களும் பொறுத்தருளுக.

பிழைகள் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் புத்தகத்திலும் வெப் ப்ளாக்கிலும் திருத்தி விடுகிறோம்.

அன்புடன்

காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன் (நினைவில்)
அற்புதத் திருப்புகழ் சபை, கோவை
Email : arputhathiruppugazhsabai@gmail.com
M : 9361410269

Wednesday, September 3, 2025

 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
அருணகிரிநாதருக்கு ஜெ.
*திருப்புகழ் முற்றோதல்*
08.08.2025

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் *தினம் ஒரு திருப்புகழ் -556*

பாடல் கேட்க / பதிவிறக்கம் செய்ய For Audio Download
https://arputhathiruppugazh.blogspot.com/2025/08/556.html

*திருப்புகழ் 556 சத்தி பாணீ (திருசிராப்பள்ளி)*

தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
    தத்த தானா தனாதன ...... தந்ததான

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
    தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
    தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும்

*பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்*
    *பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ்*
*பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித*
    *பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய்*

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
    யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
    அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே

சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
    திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா
*சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத*
    *தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.*

*------------------------------------------------------------------*
*பாடுவதற்கு எளிதாக பதம் பிரித்தது *
*------------------------------------------------------------------*

வேல்முருகா வெற்றிவேல் முருகா
வேல்முருகா வடிவேல் முருகா

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
    தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
    தற் ப்ரதாபா நமோநம ...... என்றுபாடும்

*பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில்*
    *பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல் வீழ்*
*பட்டி மாடான நான் உனை விட்டு இராமே உலோகித*
    *பத்ம சீர்பாத நீ இனி ...... வந்து தாராய்*

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி
    அர்க்ய சோமாசியா குரு ...... சம்ப்ரதாயா
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய
    அக்ஷ மாலாதரா குற ...... மங்கை கோவே

சித்ர கோலா கலா விரலக்ஷ்மி சாதா ரதா பல
    திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா
*சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகாவ்ருத*
    *தெர்ப்பை ஆசார வேதியர் ...... தம்பிரானே.*

*-----------------———————-----------------------------------------------*
*கருத்துரை* : வேலாயுதா! சேனாபதீ! வயலூர் வள்ளல்! சிராமலையப்பர் ஸ்வாமீ! தேவரீரை அடியேன் என்புருகப் பாடியுய்ய அருள் புரிவீர்.
*——————--------------------——-------------------------------------------*

எல்லா புகழும் முருகனுக்கே.
அருணகிரிநாதர் திருத்தாள் போற்றி போற்றி.

பொருளுக்கும் விரிவுரைக்கும்

https://kaumaram.com/thiru/nnt0556_u.html
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page827
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page828
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page829
https://kaumaram.com/thiru/wiki_1.php?wpp=1.page830

பிழைகள் ஏதேனும் இருப்பின் எம்பெருமானும் அடியார்களும் பொறுத்தருளுக.

பிழைகள் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் புத்தகத்திலும் வெப் ப்ளாக்கிலும் திருத்தி விடுகிறோம்.

அன்புடன்

காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன் (நினைவில்)
அற்புதத் திருப்புகழ் சபை, கோவை
Email : arputhathiruppugazhsabai@gmail.com
M : 9361410269

Sunday, July 27, 2025

*திருப்புகழ் 549 அரிவையர் நெஞ்சுரு (சிதம்பரம்)*

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
அருணகிரிநாதருக்கு ஜெ.
*திருப்புகழ் முற்றோதல்*
28.07.2025

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில்
*தினம் ஒரு திருப்புகழ் - 549*


*திருப்புகழ் 549 அரிவையர் நெஞ்சுரு (சிதம்பரம்)*

தனதன தந்தன தாத்தன
     தனதன தந்தன தாத்தன
          தனதன தந்தன தாத்தன ...... தனதான

அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
     தருவிர கங்களி னாற்பெரி
          தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந்

தகிலொடு சந்தன சேற்றினில்
     முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
          யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப்

பரிமளம் விஞ்சிய பூக்குழல்
     சரியம ருங்குடை போய்ச்சில
          பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப்

பனிமுக முங்குறு வேர்ப்பெழ
     இதழமு துண்டிர வாய்ப்பகல்
          பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ

சரியையு டன்க்ரியை போற்றிய
     பரமப தம்பெறு வார்க்கருள்
          தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே

சயிலமெ றிந்தகை வேற்கொடு
     மயிலினில் வந்தெனை யாட்கொளல்
          சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா

திரிபுவ னந்தொழு பார்த்திபன்
     மருவிய மண்டப கோட்டிகள்
          தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே

*தெரியஇ ருந்தப ராக்ரம*
     *உருவளர் குன்றுடை யார்க்கொரு*
          *திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே.*

*------------------------------------------------------------------*
*பாடுவதற்கு எளிதாக பதம் பிரித்தது *
*------------------------------------------------------------------*

வேல்முருகா வடிவேல் முருகா 
வேல்முருகா வெற்றிவேல் முருகா 

அரிவையர் நெஞ்சு உருகாப் புணர்
     தரு விரகங்களினாற் பெரிது
          அவசம் விளைந்து விடாய்த்து அடர் ...... முலைமேல் வீழ்ந்து

அகிலொடு சந்தன சேற்றினில்
     முழுகி எழுந்து எதிர் கூப்புகை
          அடியின் அகம் பிறை போற்பட ...... விளையாடிப்

பரிமளம் விஞ்சிய பூக் குழல்
     சரிய மருங்குடை போய்ச் சில
          பறவைகளின் குரலாய்க் கயல் ...... விழி சோரப்

பனி முகமுங் குறுவேர்ப்பு எழ
     இதழ் அமுது உண்டு இரவாய்ப்பகல்
          பகடி இடும்படி தூர்த்தனை ...... விடலாமோ

சரியை உடன் க்ரியை போற்றிய
     பரமபதம் பெறுவார்க்கு அருள்
          தருகணன் ரங்க புரோச்சி தன் ...... மருகோனே

சயிலம் எறிந்த கை வேற்கொடு
     மயிலினில் வந்து எனை ஆட்கொளல்
          சகம் அறியும்படி காட்டிய ...... குருநாதா

திரிபுவனந் தொழு பார்த்திபன்
     மருவிய மண்டப கோட்டிகள்
          தெருவில் விளங்கு சிராப்பளி ...... மலைமீதே

*தெரிய இருந்த பராக்ரம*
     *உருவளர் குன்றுடை யார்க்கொரு*
          *திலதம் எனும்படி தோற்றிய ...... பெருமாளே.*

*-----------------———————-----------------------------------------------*
*கருத்துரை* :  திரிசிராப்பள்ளி முருகவேளே! மாதர் வசமாகி அடியேன் அலையாமல் ஆண்டருள்வீர்.

** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் 'அதல சேடனார் ஆட' என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.
*——————--------------------——-------------------------------------------*

எல்லா புகழும் முருகனுக்கே.
அருணகிரிநாதர் திருத்தாள் போற்றி போற்றி.


பிழைகள் ஏதேனும் இருப்பின் எம்பெருமானும் அடியார்களும் பொறுத்தருளுக.

பிழைகள் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் எங்கள் புத்தகத்திலும் வெப் ப்ளாக்கிலும் திருத்தி விடுகிறோம்.

அன்புடன்
காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன்
அற்புதத் திருப்புகழ் சபை, கோவை
Email : arputhathiruppugazhsabai@gmail.com 
M : 9361410269

Thursday, March 6, 2008

மஹா சிவராத்திரி

சிவபெருமான் துதி

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ---- சேக்கிழார்

நடராஜர் பதிகம்

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே !
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே !
மங்களங்கள்யாவும் யாவும் நல்கும் அம்பிகை மணானே
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே !

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்; தொடுத்த கூரை கோபுரம்;
செந்தமிழ்ச் சொல் மந்திரம்; திருந்தும் அன்பே ஆகமம்;
சிவந்த பாத பங்கையம் உவந்தருள் நடேசனே !

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்தநன்மை விரைவிலே முடித்துவை;
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை;
ஏற்றும் அன்பர் குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே !

ஆபயந்த ஐந்தினோடு பால், பழம், பஞ்சாமிர்தம்
ஆலவாய்க் கரும்பு, தெங்குத் தேன், சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே !
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே !

அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் அல்லனே !
ஆனை, மான், சிறுத்தை வேட்டை ஆட வல்லன் அல்லனே !
இட்டமாலை ஆடையோடு தொட்டு வைத்த சந்தனம்
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே !

வில்லினால் அடிக்கவோ ? வீசுகல் பொறுக்கவோ ?
மிதித்தபோது கை, பிரம்பை மேலும் நான் எடுக்கவோ ?
நல்லபிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே !

ஆட, நீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவர்
அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன் !
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே !

மழுவெடுத்(து) எதைவிளக்க மன்றுதோறும் ஓடினாய் ?
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய் ?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய் ?
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே !

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே !
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே !
சரணம் உன்னை அன்றி ஏது ? தாங்குவாய் நடேசனே !

வாழி நீ படைக்கும் தெய்வம் மலர் அணை அமர்ந்ததாம் !
வகுத்தளிக்கும் தெய்வம்கூட அரவணை கிடந்ததாம் !
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே !
ஓய்ந்து சற்றென் நெஞ்சணைக்கண் சாய்ந்துகொள் நடேசனே !

ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம: ரூபனே !
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே ! சங்கீதனே !
வாமியாய்த் தழைத்த சிவகாமி காதல் நேசனே !
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே ! -----
அருட்கவி கு.செ. இராமசாமி

Wednesday, March 5, 2008

இன்று மகா சிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி தேவகோட்டை அருகில் உள்ள கோட்டூரில் சௌந்தர நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருகோவில்லில் சிறப்பாக நடைபெறும். மூன்றாவது காலம் பூஜை ஸ்ரீ மஹா காளருக்கு நடைபெறுவது மிக சிறப்பாகும்.

கோவையில் இஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி மிக சிறப்பாக நடைபெறும்.